Pages

Monday, December 22, 2014

புதையல்

பூமிக்கு   அடியில்தான்
என்று  அவசியமில்லை
மேலோட்டமாகவும்  கிடக்கலாம்
புதையல்கள்....!

Monday, December 15, 2014

இடைவெளிகள்

நமக்கிடையே   உள்ள   இடைவெளிகள்
நம்மைச்  சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுகிறது
சொற்களுக்கிடையே  உள்ள  இடைவெளிகள்
வார்த்தைகளைச் சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுவதுபோலவே........

Friday, December 12, 2014

பிரதிநிதிகள்

 பிரியத்திற்கு  அம்மாக்கள் !
 பிடிவாதத்திற்கு  குழந்தைகள் !

Thursday, December 11, 2014

கண்கள்

பார்ப்பதற்கு  மட்டுமல்ல..
பார்க்காமல்  இருப்பதற்கும்தான் !

Wednesday, December 10, 2014

முகம்

திரும்பத்   திரும்ப  வருகிறது
திரும்பிய  இடமெல்லாம்
விரும்பிய  உன்  முகம் !

உடைகள்

  உடலின்  அவயங்களை  மறைப்பதைக்  காட்டிலும்
  எடுத்துக்காட்டவே   செய்கின்றன  இன்றைய  உடைகள்.

Tuesday, December 9, 2014

பூக்கள்

மெத்தையில்  பூக்கிறது---வெட்கப்பூக்கள் !

காகிதம்

  படித்தவுடன்  தீர்ந்துவிடும்  புத்தகம்---காகிதம்

Monday, December 8, 2014

பார்வை

   ஜெயித்தவராகவும்
   தோற்றவராகவும்
   பிரிக்கப்படுவது
   பார்வையிலும்தானே !

ஆரோக்கியம்

  ரத்தமும்  பணமும்
  சுழற்சியில்  இருந்தால்
  ஆரோக்கியம்தானே !

தனிமை

   புடவையோடு   புலன்களையும்
   அழகாய்   தொகுத்து
   சொருகிக்  கொள்கிறேன் !