Pages

Monday, November 17, 2014

கனவில் வந்த காந்தி---7

1. நீ மறுபிறவியில்  எங்கு  பிறக்க வேண்டுமென்று  நினைக்கிறாய்?
   
    இந்த  இடத்திலேயே  பிறக்க வேண்டும்.  இந்த பிறவியில்  சிறுவயதிலேயே  அம்மா, அப்பா  இல்லாமல் போன  அனாதை நிலை மட்டும்  வேண்டாம்.

2. ஒருவேளை  நீ இந்தியாவின்  ஆட்சியாளனாக  வந்துவிட்டால்?
 
      அவரப் போல, இவரப்போல..எல்லாம் இல்லாமல்  நான்  நானாயிருந்து,  எனக்கு  என்னென்ன  சிறப்புன்னு  தோணுதோ  அத சிறப்பா செய்வேன்!!!

3.இதற்கு வெளிநாட்டில்  வாழும் இந்தியர்கள்  எதிப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?

     நாட்டை விட்டுப்  போனவங்களப்பத்தி  எனக்கு  கவலையில்லை.  பக்கத்தில  இருக்கிறவங்களோட  பார்வைதான்  முக்கியம்.

4.முதியோர்களுக்கு  என்று  ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

    முதுமையும்  ஒரு காலகட்டம்தானே... ஒதுக்கப்படுறத  நா விரும்பல.  அவுங்க  அனுபவங்கள  சந்தோஷமாக்  கொண்டாடுவேன்.

5.அரசியல்வாதிகளுக்கென்று  புதிய திட்டம் ஏதாவது?

   நாட்டை ஆளப்போறவங்களுக்கு  ஒரு தகுதித் தேர்வு  வச்சா என்ன!!!
பூ அழகாயிருக்கு....முத்துநிலவன்  அண்ணா அழகாயிருக்குன்னு  சொல்லிப்புட்டாரேன்னு  நா  மாத்தி சொல்லமுடியாது.  அப்புடித்தா இந்த பதில்.
6.  மதிப்பெண்  தவறென,  மேல்நீதி  மன்றங்களுக்குப்  போனால்?

   போகட்டும்...தப்பில்லையே..உரிமை  இருக்குல்ல....

7.விஞ்ஞானிகளுக்கென்று   ஏதும்  இருக்கிறதா?

   சரியான  அங்கீகாரம்  வழங்கனும்.  முக்கியமா  சாதி,இன வேறுபாடு  பாக்கக்கூடாது. திறமையைப்  பாக்கணும்.  அத விட்டுப்புட்டு  அந்த விஞ்ஞானி அமெரிக்க  குடிவாழ்  இந்தியர்..........கேட்டாலே புடிக்கல.

8.இதை  உங்களுக்குப்பிறகு  ஆட்சியாளர்கள்  செய்வார்களா?

   எனக்கு  கவலையில்லை.  ஆனால்,  என் பாதை சரியானது.  அதில பின்னாடி  வர்றவங்களும்  அழகா  நடந்து போவாங்கங்கிற நம்பிக்கை  இருக்கு.

9.மற்ற நாடுகளில்  இல்லாத  ஏதாவது புதுமையாக?

    கட்டாயமா  நம்ம  கலாச்சாரம்தான்.    இப்ப சீரழிந்து வருது.   மீண்டும்  பழையபடி  நம்ம  பண்பாடு மாறாம்  இருக்கணும்.  அவ்வளவுதான்.

10.மானிடப்பிறவி  தவிர  வேறு என்ன பிறவி  வேண்டுமென  இறைவன்  கேட்டால்?

  செடி கொடிகளாக......படர்ந்திட  ஆசை.  
தாவரங்கள்  நல்லவை;  சண்டையிடாதவை;  மனதுக்கு நெருக்கமானவை; மெளனத்தால்  சிரிப்பவை;  எப்போதோ  ஊற்றிய  நீருக்கு  இலைகளால்--பூக்களால்--கனிகளால்  நன்றி சொல்பவை; இன்பத்தில் மகிழாதவை; துன்பத்தில்  துவளாதவை;  பல நேரங்களில்  மனிதர்களை விடத்  தாவரங்கள் நல்லவை......எப்புடி என்  ஆசை?

கேள்விகள்  அந்த  நேரத்தின்  எதார்த்தங்கள்..என் பதில்களும்  அப்படியே..
முத்துநிலவன்   அண்ணாவுக்கு  நன்றிகள்.

41 comments:

  1. யதார்தமான பதில்கள் ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தொடர் எண் 7 தவறாக இருக்கிறதே! (எனது எண்ணும் 7?) இதைத் தொடங்கிவைத்த நண்பர் கில்லர்ஜிதான் சொல்லவேண்டும். பிறகு சகோதரி திருத்திவிடுவார். சரியா?

      Delete
    2. இல்லை சகோதரி இலக்கம் இப்பொழுது இலக்குமாறி போய்விட்டது ஆகவே இப்படியே இருப்பது நன்று.

      காலையில் செல்போணில் படித்ததனால் கருத்துரை விரிவாக இடமுடிய வில்லை தங்களது முதல் பதிலில் மனம் கணத்து விட்டது காரணம் எனது குழந்தைகளின் நிலையிலிருந்து படிக்கும்போது தற்போதைய எனது வாழ்வில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். நன்றி வலைத்தொடர்பில் இருப்போம் அன்புடன் கில்லர்ஜி

      Delete
    3. நன்றி சகோ. எப்போதும் என் ஞாபகங்களின் ஆழத்தில் பெற்றோர் இல்லை என்ற ஏக்கமும், அவர்களின் முகமும் மிதந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அந்த பதில். ஆனாலும் உங்களுடைய ஒளிவுமறைவற்ற கருத்துகளைப் படித்தவுடன் மிகவும் மகிழ்கிறேன்.எழுத்துதானே பகிர்ந்துகொள்வதற்கான எளிய வழி...தொடர்வோம்.அன்புடன் ஜெயா

      Delete
  2. மனதை தொட்டது உங்கள் முதல் பதில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நினைவுகள் நீர்ப்பாசிகள்!!!

      Delete
  3. அருமையான யதார்த்தமான பதில்கள்
    மனம் கவர்ந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒரு கல்விச் சிந்தனையாளரின் பதில்களாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். பதிவினை தமிழ்மணத்தில் இணையுங்கள். அய்யா முத்துநிலவன் அவர்கள் வலைத்தளம் வழியே இங்கு வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி அய்யா.

      Delete
  5. அம்மா
    உண்மையில் இந்த பத்து கேள்விக்கும் இவ்ளோ பொறுமையா, கலாய்க்காமல், சின்சியரா, எளிமையா பதில் சொன்னது நீங்க மட்டுமா தான் இருப்பீங்க!! சூப்பர் மா!!

    ReplyDelete
    Replies
    1. நீதானேடா எனக்கு ஆசான்.உங்கிட்டருந்துதானே கத்துக்கிறேன். ஒரு பார்வையாளராவது வேண்டும் என்று நினைத்த எனக்கு இன்று நிறைய அன்புகள். அதிலும் நிலவன் அண்ணாவின் இன்றைய பதிவு..ரொம்ப மகிழ்ச்சி. எல்லாத்துக்கும் காரணம் உன் ஆறுதலான அன்புதான். மைதிலி, கண்ணீர் வருவது போல உணர்கிறேன்..நன்றிடா

      Delete
    2. பாத்தியா மைதிலி? நீ என்னை ஆசான் அண்ணன் என்கிறாய், இவர் உன்னை ஆசான் என்கிறார். எனவேதான் இவர் இன்னும் புத்துணர்ச்சியோடு படிக்கவும் எழுதவும் முடிகிறது.. சகோதரியின் வளர்ச்சியில் நம் அன்பும் கலந்திருப்பதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். உன் மாணவியை, தொடர்ந்து எழுதுவதன் மூலம் நம் ஆசானாகத் தொடர நீதான் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

      Delete
    3. சகோதாி ஜெயாவின் கணினியில் காலக் குறிப்புத் தவறாக இருப்பதாக நினைக்கிறேன்.. நான் இப்போதுதான் சென்னையிலிருந்து வந்தேன். இப்போது நேரம் சரியாக 20-11-2014-காலை 6.30. இந்தப்பதிவு நேரத்தை ஒப்பிட்டுத் திருத்துக...

      Delete
  6. ஆகா அருமை அருமை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  7. யதார்த்தமான வெளிப்படையான பதில்கள்....

    ReplyDelete
  8. முதல் முயற்சி. தொழில்நுட்பங்கள் தெரியவே தெரியாது. அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  9. யதார்த்தமான பதில்களை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா...இப்பதான் சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி

      Delete
  10. சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஆஹா தெளிவான ஆற்றோட்டமான பதில்கள் தோழி வாழ்த்துகள்

    ReplyDelete
  12. நல்ல பதில்கள்...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் சேர்த்து நன்றி.

      Delete
  13. இயல்பான பதில்கள் என்றதால் இதயத்தைத் தொட்டது...

    ReplyDelete
    Replies
    1. இதயத்தைத் தொட்டதற்கு இதயம் கனிந்த நன்றி

      Delete
  14. இயல்பான பதில்கள் என்ற மறுமொழி பதிவின் சிறப்பை உயர்த்திவிட்டது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்து சொற்கள் என் மனதில் ஊன்றி முளைக்கக்கூடியவை. வணங்குகிறேன் அய்யா!

      Delete
  15. வாழ்த்துகள்..!ஒப்பனையில்லாத,நேர்மையான பதில்கள்..!
    தங்களின் பேச்சு போலவே வெளிப்படையாக இருக்கிறது..!

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி
    தங்கள் பதில்கள் மூலம் உங்கள் மனதைப் படித்துக் கொண்டேன். மிக எதார்த்தமாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது போல பதிலளித்து விட்டீர்கள். ரொம்பவே மகிழ்ச்சி. தங்களைப் பற்றி என்னிடம் நம் இணையத்தம்பதியினர் (கஸ்தூரிரங்கன் - மைதிலி) நிரம்ப சொல்லியிருக்கிறார்கள். தங்களின் குழந்தை உள்ளத்திற்கும் பதிவிற்கும் நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்கிறேன்....நன்றிகள்

      Delete
  17. மனதின் ஆழத்தில் இருந்து வந்த பதில்கள். சீரியசாக பதில் அளித்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. வணக்கம் அம்மா,,
    ஒவ்வொரு பதிலும் தீர்க்கமாய் தெளிவாய்..
    அருமை! அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி எனக்கும் பிடிக்கவே பிடிக்காது .. :)

    ReplyDelete
  19. வணக்கம் சகோ. வருகைக்கும் ,பதில்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. தாய், சகோதரி,சகோதரி,சகோதரன் இருந்தாலும் நானும் உங்களிள் ஒருவன் தான் சகோதரி. இதில் வருந்த ஒன்றும் இல்லை. தொடருங்கள் உங்கள் பணியை மகிழ்வுடன்.

    ReplyDelete