Pages

Sunday, November 23, 2014

இரண்டாவது பிறப்பு

என்  முதல் பிறப்பு  என் பெற்றோர்  மூலம்.  என்  இரண்டாவது  பிறப்பு  உங்கள் மூலம்.......
                      கனவில் வந்த காந்திக்கு  பதில் சொல்லவேண்டும்  என்று  நிலவன் அண்ணா சொன்னபோது  , எனக்கு  கேள்விக் கேட்க மட்டுந்தான்  தெரியும் என்று சொன்னேன்.  ஆனாலும்  என்னிடம்  ஒப்படைக்கும்  பணியை மிகச்சரியாக செய்துவிட  வேண்டும்  என்பதுதான்  என் இயல்பு. அந்த வகையில்  நாளை  பதில் எழுதிவிடுகிறேன்   என்று  அண்ணாவிடம் சொல்லிவிட்டேன்.
                     
                                அலுவலகத்தில்  தற்போது  25% இடஒதுக்கீட்டிற்கு  பணம் பெறுவதற்கான படிவங்கள்  சரிபார்க்கும் மிகப்பெரிய பணி.   நிறைய  பள்ளிகளைப்  பார்க்கலாம்,ஆசிரியர்களையும்,  மாணவர்களையும்  சந்தித்துக்  கொண்டாடலாம்  என்று  இந்த பதவிக்கு வந்த எனக்கு படிவங்களோடும்  புள்ளிவிபரங்களோடும்........மகிழ்வான மனநிலை இல்லை. 

                   அண்ணாவிடமிருந்து  இன்று  பதிலை  எதிர்பார்க்கிறேன்  என்ற செய்தி  வந்தவுடன்  இரவு பத்து மணிக்குமேல்  உட்கார்ந்து  கேள்விகளைப் படித்தேன்.  படிக்கும்போதே  ஒவ்வொரு கேள்விக்கும்  என்மனதில்  பதில் ஓடும்.அதுதான் இறுதியானது.  (  புடவை எடுக்கும்போதும்  இப்புடிதான்.  முதலில்  பார்த்த புடவைதான்  தேர்வு செய்யப்படும்.  ஆனாலும்  இருபது புடவையாவது  பார்ப்பேன்....ரசனையுள்ளவள்!  )  இருந்தாலும்  மற்றவர்கள்  எப்படி  பதிலளித்திருக்கிறார்கள்  என்று பார்த்தேன்.  ...

         கரந்தை சார், ஜம்புலிங்கம் சார், நிலவன்  அண்ணா  இவர்கள் பதிலைப் படித்ததும் .....அய்யய்யோ.....நமக்கு  இப்புடியெல்லா  பதில்  எழுதத்தெரியாதே....( ஒரு கேள்விக்குமட்டும்  அண்ணாவுடன்  ஒத்துப்போனேன் )  ரொம்ப  கவலைப்பட்டேன்.  எப்படியும்  என் மகள்  மைதிலி  மட்டுமாவது  படிப்பாள்  என்று தான்  பதில்  எழுதினேன்.

         காலையில்  பயந்துபோய்  வலைப்பக்கம் வந்த எனக்கு  ...அடடா ....நமக்குத்தானா  இவ்வளவும் !கில்லர்ஜி சகோ,  தமிழ் இளங்கோ சார்,கரந்தை சார்,முனைவர் ஜம்புலிங்கம் சார்,திண்டுக்கல் தனபாலன்  சார்,  என் மகள் மைதிலி...........எப்புடி இப்புடி எல்லாரும் ?  சத்தியமா  கால்கள்  தரையில்  இல்லவேயில்லை.  மிகச்சிறந்த  இலக்கியவாதிகளைக் கொண்ட  இந்த வலைப்பக்கத்தில்  என்  யதார்த்தமான  பதில்கள்  எடுபடாது என்று நினைத்த  எனக்கு  ,நீங்கள் அனைவருமே நல்ல ரசனையாளர்கள்  .............நன்றிகள்

      நிலவன்  அண்ணாவிற்கு  நன்றி  சொல்ல  அழைத்தபோது  ,அவரது  வலைப்பக்கத்தைப்  பார்க்கச்சொன்னார்.  போய்ப்பார்த்தால்......அடடா...எனக்கென்று தனியாக ஒரு பதிவு.நான் விரும்பிய செடிக்கொடிப்பூ  படத்துடன். கூடவே  எனக்கு மிகுந்த  அங்கீகாரமும்.  எல்லோரும்  பார்க்கவும், படிக்கவும்  வேண்டும் என்பதற்காக  நீங்கள்  எடுத்துக்கொண்ட  முயற்சி....நன்றி அண்ணா .இது  என்   இரண்டாவது பிறப்பு !

          நான்  ஊக்கப்படுத்த  வேண்டிய  படிப்பாளி,  படைப்பாளியாக  மாறவேண்டும்,  மற்றவர்கள்  அறிய  வேண்டும்...ஏன் இப்படி  ஒரு ஆசை அண்ணாவுக்கு ?  யோசிக்கிறேன்....ஆசை  என்று  நீங்கள்  சொன்னதால்  நான்  மூன்றாவது  பிறப்புக்கும்  தயாராகிறேன்.  (மூன்று பிறப்பு  இருக்கலாம்.பிறப்பு  என்பது  வளர்ச்சிதானே!)  அது  என்னை  நானே  பிரசவித்துக்  கொள்வதாக இருக்க வேண்டும். அதற்கு  நிறைய சிந்திக்கணும்,ஆழ்ந்து  உள்வாங்கணும். முக்கியமா  பொறுத்திருக்கணும்.  
                              
                  வைரமுத்து, இறையன்பு, எஸ்.ராமகிருஸ்ணன்,  சுப வீரபாண்டியன், மனுஸ்யபுத்திரன்   இப்புடி  இவர்களையே  படிப்பதால்  இவர்களோடே  இருந்துவிடுகிறேன்  அண்ணா.  இருக்கத்தான்  வேண்டும்!  ஆனால்  ஜெயாவாக  வெளியே வர வேண்டுமல்லவா?  இப்போதைக்கு  இயலாது. தொடர்ந்து  என்னை செதுக்க வேண்டுகிறேன்.  உளமார்ந்த  நன்றிகள்  நிலவன்  அண்ணாவிற்கு.
      
     

21 comments:

  1. நல்ல பகிர்வு... தங்களைச் செதுக்க நிலவன் ஐயா சிறப்பான ஆள்தான்..
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. ஜெயாவாக வெளியே வர வேண்டுமல்லவா? - ஆமாம் அதேதான்.
    உங்களின் திறமை, படிப்பு, ஈடுபாடு, மற்றவருடன் இனிமையாகப் பழகும் பண்பு எல்லாம் புதுக்கோட்டையே அறியும். ஆனால் உலகமறிய வேண்டும் என்பதே என் ஆசை. நேரத்தை ஒதுக்கி அவ்வப்போது எடுத்துவிடுங்கள் சகோதரி.. வலையுலகம் வாசிக்கக் காத்திருக்கிறது என்பதைஉங்களுக்குக் காட்டவே அந்தத் தனிப்பதிவு. இனியாவது தொடருங்கள். (அடுத்த ஆண்டு நீங்களும் மைதிலியும் நம் வலைப்பதிவர் சந்திப்பில் நூல்களை வெளியிடத் தயாராகணும்ல..?) நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான இரட்டைக் குழந்தைகளோடு எனக்கு இரண்டாவது பிறப்பு தந்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றிகள். உங்கள் ஆசை நிச்சயும் நிறைவேறும். தயவுசெய்து மைதிலியோடு வேண்டாம்....தம்மின் தம் மக்கள் அறிவுடைமை.......புள்ள மனசு நோகும்.....

      Delete
    2. இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே ரணகளப் படுதிடுரீன்களே!!!அவ்வ்வ்வவ்வ்வ்:))

      Delete
  3. வைரமுத்து, இறையன்பு, எஸ்.ராமகிருஸ்ணன், சுப வீரபாண்டியன், மனுஸ்யபுத்திரன் இப்புடி இவர்களையெல்லாம் உள் வாங்குங்கள்,பிறகு நீங்கள் நீங்களாகவே வெளிப்படுங்கள்
    கவிஞர் ஐயா சொல்வதைப் போல் வலையுலகம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கக் காத்திருக்கிறது
    கடமையோடு இதனையும் ஒரு கடமையாக எண்ணி ழுதத் தொடங்குங்கள்,
    தனியொரு உற்சாகம் பிறக்கும்,வாழ்த்துக்கள் குவியும்
    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. கட்டாயமா எழுதிப் பழகவேண்டும். நீ ங்கள் அனைவரும் தவறுகளை அன்போடு சுட்டிக்காட்டி வழிநடத்தணும்.

      Delete
  4. முத்து நிலவன் ஐயா சொன்னது தான் சரி...

    அடுத்த பதிவர் விழாவில் நூலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    எனது பாணியில் : கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

    ReplyDelete
  5. உங்களுக்கு இருக்கும் முக்கியமான பணிகளில் வலைப் பதிவு எழுதுவது, பதில் எழுதுவது என்பன சற்று சிரமமாக இருந்த போதிலும், நேரம் கிடைக்கும் போது வலைப்பக்கம் வாருங்கள்.

    உங்கள் பதிவினில் மேலே உள்ள Archive மற்றும் Profile view இரண்டினையும் வலப்பக்கம் வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா! இதைத்தான் எதிர்பார்க்கிறேன். செய்துவிடுகிறேன்.

      Delete
  6. வாசிப்பும், எழுத்தும் நம்மை மேம்படுத்தும் என்பது என் எண்ணம். முடிந்தவரை இவற்றை நான் செய்து வருகிறேன். நமக்கென்று ஒரு பாணி வைத்துக்கொள்வோம். அந்த பாதையில் செல்வோம். அவ்வப்போது நிகழும் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். ஆனால் எழுதுவதிலிருந்தும் படிப்பதிலிருந்தும் பின் வாங்க வேண்டாம். நம் எழுத்தைப் பார்த்து முதலில் நாம் மகிழ்ச்சியடைவோம். தொடர்ந்து எழுதுங்கள். உங்களது தனித்தன்மை தானாக வெளிவரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உயர்வுக்கு வித்திட்டிருக்கிறீர்கள். நன்றி அய்யா !

      Delete
  7. எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே... எனவே எண்ணுங்கள் எண்ணமெல்லாம் நலமே...
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஓ....நல்லது சகோ. வானத்தை வசப்படுத்துவோம்....நம் எண்ணங்களில்....நிச்சயமாக

      Delete
  8. அடுத்த வலைப்பதிவர் விழாவில் உங்களுடையதும் மைதிலியுடையதும் நூல்கள் வெளியீடு!! ஆகா! கலை கட்டுதே :)
    வாழ்த்துகள் ஜெயாம்மா

    ReplyDelete
    Replies
    1. சான்றோன் என்க் கேட்ட தாய்........

      Delete
  9. அம்மா
    படித்துவிட்டேன்.மாலை இதுபற்றி விரிவாக பேசுவோம். வலையில் தான்:)

    ReplyDelete
  10. உங்க பரந்த வாசிப்பு வலைபூவிற்கு பொருந்தும் என்று நான் எத்தனை முறை சொன்னேன்!! இப்போவாவது வந்தீங்களே!! அதுவும் அதிரடியாய்!! இன்னும் பல உயரங்கள் உங்களுக்காக காத்திருகிறது. முகப்புத்தகத்தின் சில தாள்களை இங்கே தட்டுங்க சொல்லுறேன்:))

    ReplyDelete
  11. செய்கிறேன். மகளின் அன்பு அங்கீகாரத்தோடு

    ReplyDelete