Pages

Friday, November 28, 2014

நான் சாரதி

  என்  வாகனத்தின்
  ஒரு  கதவைத்  திறந்து
  உன்னை  வரவேற்கையில்
  உயிருள்ளவளாகவும்....
  அதே  கதவைத் திறந்து
  உன்னை  வழியனுப்புகையில்
  உயிரற்றவளாகவும்......
   நான்...உன் சாரதி !

  கடவுள்கள்  இல்லாத  உலகில்
  சாரதி  நான் தான்  உன்னை
  மோட்சத்திற்கும்  நரகத்திற்கும்
  இட்டுச்  செல்ல  வேண்டும்..
  ஆனால்
  வெறுமனே  நிற்கிறேன்
  நான்....உன்சாரதி !

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வினோதமான சிந்தனைகள் வாழ்த்துகள்.

      Delete
    2. நன்றி சகோ. மனதில் பட்டதைச் சொல்லுங்கள்

      Delete
  2. அட! அட! அட! நான் சாரதி என்பதை driving தெரிந்த நீங்க சொல்லும்போது ஒரு புது கலர் கிடைக்குதே!!! சூப்பர் அம்மா !

    ReplyDelete
  3. நல்ல சிந்தனையில் வந்த ரசனையுடன் கூடிய கவிதை.

    ReplyDelete
  4. கவிதை நன்றாக இருக்கிறது சகோதரி.
    உங்கள் இண்டிகாவில் நீங்களே ஓட்டுநராக இருப்பதைப் பார்த்ததில் ஒரு சிறு குழப்பம்... (ஒருவேளை உங்கள் ஓட்டுநர் விடுப்பில் இருந்தபோது பார்த்திருப்பேனோ?)
    வாகனமே சொல்வது போல கற்பனை செய்திருந்தால் இன்னும் அர்த்தம் கூடுதலாகக் கிடைத்திருக்குமோ என யோசிக்கிறேன்.
    ஆனாலும் கவிதையும் இந்தக் கற்பனையுமே அழகுதான்.
    அன்பு கூர்நது தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. இப்பதான் புரியுது. என் வாகனமே கற்புனை செய்திருக்கலாமே என்று ! என் உணர்வுகளை அப்படியே வடித்துவிட்டேன். நல்ல வழிகாட்டல். தொடர்ந்து வேண்டும்.

      Delete