Pages

Thursday, November 27, 2014

சாதல் கூட இனியது !

  சாதலின்  இன்னாதது  இல்லை  இனிததூஉம்
  ஈதல்  இயையாக்  கடை.---    ஈகை   அதிகாரத்தின்  இறுதி.....
         
          துன்பத்தின்  உச்சம்  இறந்துபோவதுதான்.  இன்பத்தின்  உச்சம்  வாழ்ந்துவிடுவதுதான்.    வறுமையோடு  வாழ்கிறவனுக்கும்  வாழ்ந்துவிட  வேண்டும்  என்கிற எண்ணம்  இருக்கும்.  நோயோடு  வாழ்கிறவனுக்கும்  வாழ்ந்துவிட வேண்டும்  என்கிற  எண்ணம்தான்  இருக்கும்.

              சாதலின்  இன்னாதது  இல்லை  என்று  வள்ளுவன்  சொல்லி இருப்பது  மெய்தான்.  ஆனால்  சாதலும்கூட   ஒரு கட்டத்தில்  இனிமையானது,  எப்ப தெரியுமா?   ஈதல்  இயையாக் கடை !

         பிறருக்கு  நம்மால்  எதையும்  கொடுக்க  முடியாத நிலை  வரும்போது  அந்த  நிலையில்  நாம்  இறந்து போவதுகூட  இனிமையானதுதான்.

       இதெல்லாம்  நீங்கள்  அறிந்ததுதான்....என்னுடைய  வேண்டுதல்  என்னவென்றால்,  ஈகை, ஈதல்  என்பதை  தயவுசெய்து  பொருளோடு  மட்டும்  பொருத்திப் பார்க்க வேண்டாம்.  இருக்கிறவன்  இல்லாதவனுக்குக்  கொடுக்க  வேண்டும்  என்பதே  ஈகை.  நாமெல்லாம்  அன்பு, பண்பு,  பாசம், நேசம்.நேரம்.புன்னகை, வார்த்தைகள்...இதெல்லாம் இருக்கிறவர்கள்.  கொடுக்கலாமே !  ப்ளீஸ்....

          பிறருக்காக  நேரத்தைக் கொடுங்கள்,  அன்பைக் கொடுங்கள்.  நல்ல வார்த்தைகளைக் கொடுங்கள்.....ஈகைதான்.  மீண்டும் குறளைப் படியுங்கள்.  நன்றிகளுடன்   இரா. ஜெயா.

    

13 comments:

  1. பிறருக்காக நேரத்தைக் கொடுங்கள், அன்பைக் கொடுங்கள். நல்ல வார்த்தைகளைக் கொடுங்கள்.....ஈகைதான்

    உண்மை.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. இருப்பதைக் கொடுப்போம் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. இருப்பதை கொடுத்து சிறப்புடன் வாழும் வழிகள்.

    ReplyDelete
    Replies
    1. தனக்குள்ளேயே ஓர் உலகம் தோழர்

      Delete
  4. கொடுப்பவர்களாக வாழ நீங்க சொன்ன அத்தனையுமே வெகு சிறப்பான விஷயங்கள். கொடுத்து வாழ்வோம் நானும் என்றென்றும். அருமையாச் சொன்னீங்கம்மா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      Delete
  5. “நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
    நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்,
    அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்“ - ஆசான் பாரதி.
    (ம்.? செலவு பண்ணாமயே புண்ணியம் சேர்க்குற வழி?
    நல்ல புண்ணியம்.. தொடர்ந்து எழுதுங்க சகோதரீ)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர். முலாம் பூசி புத்துணர்ச்சி தருகிறீர்கள்

      Delete
  6. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  8. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com
    (குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete