Pages

Friday, February 6, 2015

இருக்கை

    25  வருடங்கள்   பேருந்தில்   பயணித்துக்  கொண்டிருக்கிறேன்   என் 

பணியின்  பொருட்டு.   நடத்துனர்  இருக்கைக்  காலியாக  இருந்தால்  அவர் 

வரும்  வரை  அதில்  ஓடிப்போய்  உட்கார்ந்துகொள்ளும்  ரகம்தான்  நான்.      ஆனால்   இன்று  நடத்துனரே  அவர்  இருக்கையில்  என்னை  உட்காரச்சொல்லியும்  நான்  மறுத்துவிட்டேன்.  காரணம்  தோழர்  இரா.எட்வின்  அவர்களின்   அருகம்புல்லேயாயினும்.....(அந்தக்  கேள்விக்கு  வயது 98 )   தலைப்பில்  படித்த  அச்சடிக்கப்பட்டப்  புத்தக  வரிகள்தான்.              
    
        அதைப்  படித்தப்  பிறகுதான்   நான்  அலுவலர் ..என்  சீட்டுல  எப்புடி  நான்   யாரையும்  உட்கார  அனுமதிக்க  மாட்டேனோ,  அப்புடித்தானே  அவரோட  சீட்டும்.....இந்த  உண்மையை   உணர்ந்தேன்.  அடடா  எவ்வளவு  மகிழ்ச்சி  தெரியுமா  எனக்கு!   இனி  அரசுப்  பேருந்து  உள்ளவரை,  நடத்துனர்  இருக்கை  இருக்கும் வரை,  நான்  பயணிக்கும்  காலம்வரை   நடத்துனர்  இருக்கையில்  உட்காரவே  மாட்டேன்.   பையப்  பையப்  புரளும்  சமூகம்.....ன்னு   தோழர்   எழுதியிருந்தாரு   இப்ப  புரளுது  தோழர்.
      
நடத்துனர்க்கிட்ட   அது  உங்களோட  சீட்டு,  அதுல  யாருமே  உட்காரக்கூடாது  என்று  நான்  சொன்னவுடனே  என்னைப்  பார்த்து  ஒரு  சிரிப்பு...பூ..சிரிச்சாருப்  பாருங்க......சொல்லமாட்டேன்    அது  சொர்க்கம்.

10 comments:

  1. நல்ல கொள்கைதான் தங்களுடையது வாழ்த்துகள்.

    எனது தளத்தில் பேரூந்தைக்குறித்து ஒரு பதில் எழுதியுள்ளேன் இந்த பஸ்ஸுல ஓடிப்போயி ஏறுங்க பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. சென்னையில் பயிற்சியில் இருந்தேன். பார்க்கிறேன்.

      Delete
  2. ஓ அதுனாலதான் பன்னீர் செல்வம் ஜெயலலிதா அமர்ந்த சேரில் அமர மறுக்கிறாரோ என்னவோ இதை புரியாம அவரை எல்லோரும் கலாய்க்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா...

      Delete
  3. நடத்துனர் சிரித்தது இங்கே தெரிகிறது....!

    ReplyDelete
    Replies
    1. நான் வெட்கப்படுவது தெரியலையா.....?

      Delete
  4. “இனி அரசுப் பேருந்து உள்ளவரை, நடத்துனர் இருக்கை இருக்கும் வரை, நான் பயணிக்கும் காலம்வரை நடத்துனர் இருக்கையில் உட்காரவே மாட்டேன்.“ ஓ அப்படியா?
    விரைவில் நீங்கள் -இப்போதிருக்கும் AEEO பொறுப்பிலிருந்து DEEO ஆகி, பிறகு JD ஆகப் போகிறீர்கள்தானே? அப்பறம் எங்க நீங்க பேருந்தில போறது..? (இப்படியெலலாம் சவால் விட ஒரு தில் வேணும் அது எங்க ஜெயாம்மா கிட்ட ஏராளம் இருக்குன்னு தெரியும்..நீங்க சொன்ன சுவாரசியத்தை ரசிச்சேன்) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, ஒய் திஸ் கொலவெறி..? சும்மாண்ணா மிக்க நன்றி

      Delete