Pages

Sunday, February 8, 2015

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான்.......அனுபவம்

    இன்று  (25.01.2015)  நடந்த  வீதி  இலக்கியக்  கூட்டத்தில்  கவிஞர்  வைகறை  அவர்கள்  தன்னுடைய  ஜன்னல்  திறந்தவன்  எட்டிப்பார்க்கப்படுகிறான்...கவிதைத்  தொகுப்பை  அன்போடு  வழங்கினார்.

    கூட்டம்  முடிந்து  பேருந்தில்  பயணிக்கும்போதே  படிக்க  ஆரம்பித்து  விட்டேன்.  குழந்தைகளோடே  பழகுபவள்,  குழந்தையாகவே  இருக்க  விரும்புபவள்...   இது  போதாதா   எனக்கு  ஜெய்குட்டியோடு  குதூகலிக்க....!

       பறவை  வரைய  நினைத்தவன்
       வரைய  மறுக்கிறான்
      கோடு  போட்ட  காகிதத்தில்....

பறவைய  சுதந்திரமா  பறக்கவிட  வேண்டாமா?  அதென்ன  கோடு  போட்டப்  பேப்பர்ல  பறக்கவிடுறது...ஜெய்குட்டியின்  பிடிவாதத்தை  ரொம்பவும்  ரசித்தேன்.

      அரிசி  கொத்தும்  காகம்
     விரட்ட  வந்த  ஜெய்குட்டி
     தாமதிக்கிறான்   கொஞ்சம்

நியாயம்தானே..பொம்மைக்கு  சோறு  ஊட்டுற   குழந்தையால  எப்புடி  காக்காவ  விரட்டமுடியும்?  அழகு  குழந்தைத்தனம்.

ஐ  மூனு  கிளி!-----யில்  கவிஞருக்கே  உரிய  தற்குறிப்பேற்றம்,

கிழித்துவிடலாம்---தலைப்பில்  பாரதியின்  நினைவு  நாளை  எப்படியோ(தொலைக்காட்சி  வாயிலாக)  வருகிற/ வளர்கிற  தலைமுறை  அறிந்து கொள்வதில்  உண்டாகும்  மகிழ்ச்சி.  இப்படி  அனைத்து  கவிதையிலும்  கவிஞரின்  உழைப்பு  உன்னதமடைகிறது.

உங்கள்  கவிதை  ஜன்னலைத்  திறந்து  எட்டிப்பார்த்ததில்,  என்  குழந்தைப்  பருவம்  நிழலாடியது.  என்  குழந்தைப் பருவத்தில்  நான்  தக்கவைத்துக்  கொண்டவைகள்,  தவறவிட்டவைகளைக்  காட்டிலும்  அதிகமானவைதான்  என்பதையும்  உணர்ந்து  மகிழ்ந்தேன்.  கவிஞர்  வைகறை  அவர்களுக்கு  உளமார்ந்த  நன்றிகளும்  வாழ்த்துகளும்!

4 comments:

  1. தங்களின் விமர்சனம் கவிஞர் வைகறையின் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  2. சிறந்த விமர்சனம்

    ReplyDelete
  3. வாசிக்கத் தூண்டும் விமர்சனம் அக்கா..

    ReplyDelete
  4. அடடே.. ரசனைக்குரிய ஜெய்குட்டியின் குறும்புகளை ஒருகுழந்தை ரசிக்காமல் இருக்க முடியுமா? வளர்ந்திருந்தாலும் நமக்குள் இருக்கும் குழந்தையைத் தொட்டுவிடுவதில் கவிஞர் வெற்றிபெற்றிருப்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் குழந்தையே

    ReplyDelete