Pages

Monday, September 7, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 30

    “ சாப்பிடுவதைச்  சிரத்தையோடும்,  நெறியோடும்  செய்கிறவர்கள்  மற்ற  அனைத்து

செயல்களையுமே  ஒழுங்காகச்  செய்யக்  கற்றுக்  கொள்வார்கள்”

         வாழ்வதற்கு  உண்பவர்கள்  மத்தியில்
         உண்பதற்காக   வாழ்பவர்களை  வரவேற்கிறேன் !

  உணவும்  உணர்வும்--- என்   நாணயத்தின்   இரு  பக்கங்கள் !

       புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவிற்கு  வருகை தரும்  புத்திசாலிகள்  அனைவரும்  பணி  செய்வதற்கும்     செயல்படுத்துவதற்கும்  உணவு முக்கியம்  பாஸ் !

என்ன  சாப்பிடுகிறோம்  என்பதைக்  காட்டிலும்,  யாரோடு  எங்கே  சாப்பிடுகிறோம்  என்பதுதான்  முக்கியம்!  அன்போடு  பரிமாறுகிறபோது  சாதாரண  உணவும்  அபரிமிதமான  உணவாக  பரிமளிக்கும்  என்னைப்போலவே!

              பழனியப்பா   மெஸ்  (அசைவம்  மட்டும்)
     
காலையில்----ஆட்டுக்கால்  சூப்,  இடியாப்பம்+பால்,  ஆப்பம்+தேங்காப்பால், புட்டு.

நண்பகலில்--சோறு,  மீன் குழம்பு, தலைக்கறி, குடல், பொடிமீன் வறுவல், நாட்டுக்கோழி,
                                  எல்லாத்தையும்விட  முக்கியமா  கறிக் கோலா !
மாலையில்----சுக்கு  அதிமதுரம்  ஏலக்காய்  இஞ்சி  கலந்த  சூடான  ஸ்பெஷல்  பால் !

இரவில்---முட்டை சப்பாத்தி,  கோதுமை  தோசை, கம்பு தோசை, கேழ்வரகு தோசை....

      எங்க  புதுகைக்கு  ஒரு  உண்மையான  தோழர்  பழனியப்பா மெஸ்  ஓனர்!
உணவுகளோடு  தமிழ்  உணர்வுகளையும்  சேர்த்துத்  தருபவர்  இந்த  தோழர்!

    அசைவ  உணவை   சாப்பிடுவதுதான்  கொடுமையான  உணவு  என்று  யாரும்   நினைக்க வேண்டாம்!  கோபத்தோடு  சாப்பிட்டால்,  சாப்பிடப்படும்  அனைத்துமே  கொடுமையான  உணவாய்த்தான்  இருக்கும்!

                மகிழ்ச்சியா   சாப்பிட  வாங்க!  நமக்கு  சோறு  முக்கியம்  பாஸ் !

16 comments:

 1. சகோதரி, அன்புகூர்ந்து எழுத்துருவை மாற்றுங்கள்.
  படிக்க மிகவும் சிரமமாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன்.....எல்.கே.ஜி--யை மன்னிச்சு விட்டுடுங்க.......

   Delete
 2. கோபத்தோடு சாப்பிடாமல் மகிழ்வுடன் சாப்பிடுவோம் :-)

  ReplyDelete
 3. சோறு நல்ல தமிழ்ச் சொல். அது முக்கியமானதுதான். அதைப் போலவே ஒரு தமிழ் வலைப்பதிவுக்கு எழுத்துருவும் முக்கியம். நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்றே புரியவில்லை. ஆசிரியர் நா.முத்துநிலவன் சொன்னதைப் போல எழுத்துருவை மாற்றுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் அய்யா!

   Delete
 4. மகிழ்வுடன் சாப்பிடக் கிளம்பிவிட்டேன் சகோதரியாரே
  உங்களுக்கு ஒன்று தெரியுமா
  ஏற்கனவே பழனியப்பா மெஸ்ஸில் பல முறை சாப்பிட்டிருக்கிறேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வும் வணக்கமும் சகோதரர். வாருங்கள் அன்புடன் உபசரிப்போம்!

   Delete
 5. இதற்காக ஒரு வாரம் முன்பே வந்து விடுகிறேன்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. இத..இதத்தான் எதிர்பார்க்கிறேன்!

   Delete
 6. ஆகா...சகோதரீ... உங்களோடு புதுக்கோட்டையில் சில உணவகங்களில் சாப்பிடப் போன தருணங்களில் அந்த உணவக உரிமையாளர்கள் உங்களை ஓடிவந்து வரவேற்ற காரணம் புரிகிறது... நல்ல சுவையைத் தான்மட்டும் உணராமல் அடுத்தவரும் உணரத் தரும் உங்கள் அன்புக்கு ஈடேது? (முழுநிலா முற்றங்களிலேயே கீரனூர் மாடி என்றும் நினைவிலிருக்குமே?) வாங்கித்தருவீர்கள் என்பது தெரியும் இப்படி விளக்கமும் தருவீரா? அருமை.. நாவில் நீர்ஊறப் படித்து முடித்தேன்...ஷ்ஷ்.. அவ்வளவு தானா இன்னும் உண்டா? புதுக்கோட்டை இனிப்புகள்...?

  ReplyDelete
  Replies
  1. இது 30. இன்று 29 வரும். நாளை28.........

   Delete
  2. ஓகோ... 30...29...28ஆ?
   அப்ப ஏதோ கணக்கோடத்தான் எழுதுறீங்க..
   அள்ளுங்க.. நாங்களும் காத்திருக்கிறோம்
   உங்கள் பதிவையும் பலவகை உணவையும் ருசிக்க...

   Delete
 7. முதலில் டேஸ்டுக்காக எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க அதை பார்த்துவிட்டு இதெல்லாம் பதிவர்களுக்கு பிடிக்குமா இல்லையா என சொல்லுறேன்

  ReplyDelete
 8. சோறு முக்கியம்தான்....

  ReplyDelete
 9. இரா. ஜெயலெட்சுமி அவர்களுக்கு வணக்கம்.
  வலைப்பதிவர் திருவிழாவிற்க்கு வந்திருந்தேன். அதில் குறிப்பாக உங்களின் பங்களிப்பாக உணவுத்துறை இருந்ததாக கூறினார்கள். மிகவும் அருமையான உணவு.
  அதிலும் மதிய உணவு சொல்ல வார்த்தைகளே இல்லை. நன்றி..

  ReplyDelete