Pages

Thursday, October 1, 2015

குவளையாக வேண்டாமே.....குளமாக இருக்கலாமே !

என்  நாகரீகம்   உப்போடு  தொடங்குகிறது .....


கைநிறைய  உப்பை  அள்ளி , ஒரு குவளை  தண்ணீரில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  எப்படியிருக்கும்  என்று  உங்களுக்குத் தெரியும்! அதே மாதிரி  கைநிறைய  உப்பை அள்ளி, ஒரு குளத்தில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  சுவையாக  இருக்கும்!  அதே அளவு  உப்புதான், அதிகத் தண்ணீரில்  கரைக்கும்போது  அது  உவர்ப்பாக இல்லை. எந்தப்  பாத்திரத்தில் கரைக்கிறோம்  என்பதில் தான்  சுவையடங்கியிருக்கிறது.  நாமும்  எந்தக்கூட்டத்தில்  கலக்கிறோம்  என்பதில் தான் உணர்வடங்கியிருக்கிறது!
பெரிய  பாத்திரமாக  மனதை  ஆக்கிக்கொண்டு  புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு  வருகை தந்திட  அன்புடன்  அழைக்கின்றேன் !


குவளையில்  கரையாமல்...புதுக்கோட்டையில்  கரையலாமே....!

நான்  உணவுக்குழு !  நமக்கு  உணர்வோடு  உணவும்  முக்கியம்!
சாப்பாடு  சம்பந்தமா  எப்ப வேணாலும்  பேசலாம்...9842179961 / 7402734201



15 comments:

  1. “நோக்குமிடம் எல்லாம் நாமன்றி வேறில்லை” எப்புடீ?

    ReplyDelete
  2. நீந்திப் போக முடியவில்லை அண்ணா !

    ReplyDelete
  3. உவமான உவமேயம் அருமை. உப்பிட்டவரை உள்ளவும் நினை என்பதனை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். அழைப்பிதழுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வித்தியாசமான அதே நேரத்தில் சுவை அருமையாக இருக்கும்படி இருக்கிறது உங்கள் பதிவு. நீங்கள் ஏற்பாடும் பண்ணும் உணவை சுவைக்க வாய்ப்பு இந்த தடவை எனக்கு கிடைக்கவில்லை. அதுனால நீங்க என்ன செய்யுறீங்க விழா முடிந்ததும் நீங்கள் ஏற்பாடு செய்யும் உணவக்த்தில் இருந்து ரிசிப்பு பெற்ரு பதிவாக இடுங்கள் அதன் முறைப்படி செய்து சுவைத்து பார்க்கிறேன்.

    உங்களின் உழைப்புக்கு முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ருசிக்கும்படி சமைத்து (படைத்து) அனுப்புகிறேன் .......

      Delete
  5. ஆஹா! உணவுக்குழு அருமையாய் சொல்லிட்டீங்களே ஜெயாம்மா :)
    உங்களை உள்ளளவும் நினைப்பார்கள் , நினைப்பேன் :)

    ReplyDelete
  6. ஆகா
    பேசுவோம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம்.

      Delete
  7. நீங்கள் “உணவுக்குழு“ மட்டுமா ஜெயாம்மா?
    ஒரு மாவட்ட அலுவலர் என்பதையெல்லாம் மறந்து, இன்று எங்களோடு மொசைக் தரையில் அமர்ந்து அழைப்பிதழ் உறையிலிடும் பணியைச் செய்தபோது, விழாக்குழுவின் “உணர்வுக்குழுத் தலைவி” நீங்கள்தான் என்பதை நான் உணர்ந்தேன். உங்கள் செயல்களால் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள். நன்றி - நா.முத்துநிலவன், ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ! நம்ம வீட்டு பிள்ளை ஜெயா... என்பதை மறந்துவிடுகிறீர்கள். ( வயசானா இப்புடித்தான் .எப்பூடி)

      Delete
    2. அய்யோடா யாருக்கு வயசாச்சு..அண்ணன் இருக்குற சுறுசுறுப்ப பாத்தா வயசு குறைஞ்சிக்கிட்டேபோகுதோன்னு தோணுதேம்மா..

      Delete
  8. மிக முக்கியமான துறை!!! அதுவும் இந்த மாயவரத்தான் 'எம்ஜிஆர்'க்கு மனதுக்கு நெருக்கமானது! அசத்துங்க! நானும் வர முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்! பார்ப்போம்!!

    ReplyDelete