Pages

Thursday, January 1, 2015

கதை நான் ......கருத்து நீங்க !

ஒரு  வாத்தியாரு  கிராமத்துல  இருந்த  விவசாயி  ஒருத்தரப்  பாக்கப் போனாராம். விவசாயிக்கிட்ட  ஒரு விளை நிலமும்,  ஒரு  செக்கும்  இருந்துச்சாம்.  வாத்தியாரு  விவசாயிக்கிட்டப் போய், “எப்புடி இரண்டு  வேலையையும்  ஒரே  ஆளாச்  செய்றீங்க?” அப்புடீன்னு கேட்டாராம்.

”செக்குமாடு  ஒரே  வட்டத்துலதானே சுத்திக்கிட்டு  இருக்கும்.  அது  கழுத்துல  ஒரு மணி  கட்டி இருக்கேன்.  மாடு  நின்னுட்டா  சத்தம்  வராது.  உடனே  நான்  ஹாய்...ஹாய்....ன்னு  குரல்  கொடுப்பேன். மாடு  திரும்பவும் சுத்த  ஆரம்பிக்கும். அதுனால  வயல்  வேலை  செய்யிறதுல  எனக்கு  எந்த  இடையூறும்  வராது”  சொல்லிட்டாரு  விவசாயி.

உடனே  வாத்தியாரு,”மாடு  ஒருவேளை  தலையை  மட்டும்  ஆட்டிக்கிட்டு  சுற்றாமல்  நின்றால்கூடச்  சத்தம்  வருமே....அப்ப  என்னா செய்வீங்க?”  கேட்டுவிட்டார்.  உடனே  விவசாயி  சொன்னாராம்.....”என்  மாடு  அப்புடியெல்லாம்  செய்யாது.  அது  என்ன உங்கள  மாதிரி  ரொம்பவாப்  படிச்சிருக்கு....இப்புடியெல்லாம்  குறுக்குத்தனமா  யோசிக்க?”........

கதை  தமா....ஷா....சொன்னாலும்,   கல்வி  குறுக்குவழியை  உருவாக்க  உதவுதா?  இல்லயா?  உண்மையைச்  சொல்லுங்க...........

Monday, December 22, 2014

புதையல்

பூமிக்கு   அடியில்தான்
என்று  அவசியமில்லை
மேலோட்டமாகவும்  கிடக்கலாம்
புதையல்கள்....!

Monday, December 15, 2014

இடைவெளிகள்

நமக்கிடையே   உள்ள   இடைவெளிகள்
நம்மைச்  சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுகிறது
சொற்களுக்கிடையே  உள்ள  இடைவெளிகள்
வார்த்தைகளைச் சரியாக  வாசிக்கவும்  புரிந்துகொள்ளவும்  உதவுவதுபோலவே........

Friday, December 12, 2014

பிரதிநிதிகள்

 பிரியத்திற்கு  அம்மாக்கள் !
 பிடிவாதத்திற்கு  குழந்தைகள் !

Thursday, December 11, 2014

கண்கள்

பார்ப்பதற்கு  மட்டுமல்ல..
பார்க்காமல்  இருப்பதற்கும்தான் !

Wednesday, December 10, 2014

முகம்

திரும்பத்   திரும்ப  வருகிறது
திரும்பிய  இடமெல்லாம்
விரும்பிய  உன்  முகம் !

உடைகள்

  உடலின்  அவயங்களை  மறைப்பதைக்  காட்டிலும்
  எடுத்துக்காட்டவே   செய்கின்றன  இன்றைய  உடைகள்.