ஒரு வாத்தியாரு கிராமத்துல இருந்த விவசாயி ஒருத்தரப் பாக்கப் போனாராம். விவசாயிக்கிட்ட ஒரு விளை நிலமும், ஒரு செக்கும் இருந்துச்சாம். வாத்தியாரு விவசாயிக்கிட்டப் போய், “எப்புடி இரண்டு வேலையையும் ஒரே ஆளாச் செய்றீங்க?” அப்புடீன்னு கேட்டாராம்.
”செக்குமாடு ஒரே வட்டத்துலதானே சுத்திக்கிட்டு இருக்கும். அது கழுத்துல ஒரு மணி கட்டி இருக்கேன். மாடு நின்னுட்டா சத்தம் வராது. உடனே நான் ஹாய்...ஹாய்....ன்னு குரல் கொடுப்பேன். மாடு திரும்பவும் சுத்த ஆரம்பிக்கும். அதுனால வயல் வேலை செய்யிறதுல எனக்கு எந்த இடையூறும் வராது” சொல்லிட்டாரு விவசாயி.
உடனே வாத்தியாரு,”மாடு ஒருவேளை தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு சுற்றாமல் நின்றால்கூடச் சத்தம் வருமே....அப்ப என்னா செய்வீங்க?” கேட்டுவிட்டார். உடனே விவசாயி சொன்னாராம்.....”என் மாடு அப்புடியெல்லாம் செய்யாது. அது என்ன உங்கள மாதிரி ரொம்பவாப் படிச்சிருக்கு....இப்புடியெல்லாம் குறுக்குத்தனமா யோசிக்க?”........
கதை தமா....ஷா....சொன்னாலும், கல்வி குறுக்குவழியை உருவாக்க உதவுதா? இல்லயா? உண்மையைச் சொல்லுங்க...........

This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி
Deleteநல்ல காமெடியோடு படிக்காதவரும் அறிவாளியே என்ற உண்மையை வெளிப்படுத்தியது வாழ்த்துகள். எனது புதிய பதிவு
ReplyDeleteஎமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.
உங்கள் பதிவுகள் பார்க்கிறேன். நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு சிந்தனைக் கதை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோதரி...
நன்றி சகோதரர்.
Deleteநாகரிகம், புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என பல பேர் கொடுத்து நாமலே நம்மை காப்போதிப்போம். ஏன்னா நாம படிச்சவங்க:) சூப்பர் ஸ்டோரி ம்மா:)
ReplyDeleteகல்வி மூலம் நம் 1) அறிந்து 2) தெரிந்து 3) புரிந்து கொள்வதை பொறுத்து....!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
நல்லது. உங்களுக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்...
Deleteகல்வியை குறுக்குவழியில் பயன்படுத்தும் சிலர்...
ReplyDeleteநல்ல கதைங்க
நன்றி சகோதரி
Deleteகுறுக்குவழியை கல்வி கற்றுத்தராது அரைகுறைக் கல்வியே கற்றுத்தரும் என்பது என் கருத்து! சுவையான கதை! நன்றி!
ReplyDeleteநல்ல கருத்து. நன்றிகள் .
Deleteஅருமையான கதை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கமும் நன்றியும்!
DeleteThis comment has been removed by the author.
Delete“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா,
ReplyDeleteபோவான் போவான் அய்யோன்னு போவான்“ என்ற பாரதியும்,
“அதகம் படிச்ச மூஞ்சூறு கழனிப் பானையில கையவிட்டுச்சாம்“ என்கிற பாரதியும் சொல்வது இதைத்தானே? நம் கிராமத்துப் படிக்காத அனுபவ மேதைளிடம்தான் எவ்வளவு சரக்கு இருக்கு? நல்ல கிராமத்துக் கதையை உங்களின் இயல்பான நடை மேலும் ரசிக்க வைத்தது சகோதரி. கலக்குங்க.. வாழ்த்துகள். நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பான பொங்கல் வாழ்த்துகள்
Deleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
என்ன ஆச்சு? பதிவு எதையும் காணோம்? அலுவலக வேலைஎனும் அலை ஓயாது.. அப்பப்ப தலை முழுகிடணும்..
ReplyDeleteஉங்கள் பதிவென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திட வந்த எங்களை ஏமாற்றாதீர்கள் ஜெயாம்மா.. எழுதுங்கள்.. எதிர்பார்க்கிறோம்ல?
மன்னிக்கவும். அலுவலகத்தில் அதிகப்படியான வேலைக் காரணமாக கவனிக்க இயலாமல் போய்விட்டது. இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும்!
ReplyDeleteமன்னிக்கவும். அலுவலகத்தில் அதிகப்படியான வேலைக் காரணமாக கவனிக்க இயலாமல் போய்விட்டது. இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும்!
ReplyDelete