11.10.2015 வலைப்பதிவர் திருவிழாவில்.............
என் வாழ்க்கை வரலாற்றில் முதல் முறையாக உணவுக்குழு தலைமை !
என்னால் முடியும் என்கிற என் வாழ்க்கை மொழியோடும் உணர்வோடும் ஏற்றுக்கொண்டேன்.
10.10.2015 மாலையில் தேநீரோடு துவங்கினோம். இரவு சப்பாத்தி+குருமா. கிச்சடி+ தேங்காய் சட்டினி. மசாலாப் பால் அவ்வளவுதான்.
11.10.2015 காலையில் இட்லி, பொங்கல், வடை + தக்காளி சட்டினி, தேங்காய் சட்டினி, சாம்பார்+ காபி அவ்வளவுதான்.
காலை 11 மணிக்கு சுடச்சுட பேபிகான் சூப்பு+ சூடான தேநீரும்!
மதிய உணவு, தலைவாழை இலையில் பூந்தி+ உப்பு. காய்கறி கட்லட், பனீர் பட்டாணி பொறியல்,கருணைக்கிழங்கு மசியல், மாஇஞ்சி +கொண்டைக்கடலை மண்டி, சேனைக்கிழங்கு வறுவல், புடலைக்காய் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பாயாசம். கருவேப்பிலை சோறு முதலில் அப்புறம் சோறு+ பருப்பு நெய், சாம்பார், பூண்டுக்குழம்பு, பைன் ஆப்பிள் ரசம், தயிர். தண்ணீர் பாட்டில் வைத்தோம்.
சாப்பிட்டு கைகழுவியபின், முக்கனிகள் (மா, பலா, வாழை மிகச்சிறிய அளவோடு) சுவீட் பீடா , ஐஸ்கிரீம் எடுத்துக்கொண்டார்கள்.
மாலை 4.30 மணிக்கு சுடச்சுட பணியாரம் இனிப்பு 2, காரம்2+ இஞ்சி டீ.
எல்லாவற்றையும்விட அன்பான பரிமாறல் + உபசரிப்பு.
எல்லோரும் ருசித்துவிட்டு நன்றாகயிருக்கிறது என்று பாராட்டினார்கள். அத்தனை பாராட்டுகளும் ருசியாக சமைத்த சமையல் கலைஞர்களுக்கே!
பைவ் ஸ்டார் ஹோட்டல்தான் சமையல் கலைஞர் பெயர் சொல்வாங்களா? நம்ம கமையல் கலைஞர் பெயர் இதோ,
திரு.கரு. கருப்பையா மைனர் அவர்கள்
பொன்னனூர்___நச்சாந்துபட்டி 944292606
சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் கைக்கூப்பிய நன்றிகள்!
என் இரு கைகளாக செயல்பட்ட கவிஞர் மாலதிக்கும், தங்கை ரோஸ்லினுக்கும் (கவிஞர் வைகறையின் மனைவி) நன்றிகள்!
புதுக்கோட்டை நர்சரிப்பள்ளிகளின் தலைவர் திரு.அண்ணாத்துரை (அவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்) அவர்களுக்கும் நன்றிகள் பல.....!
மகிழ்ச்சியாக சாப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்! பொறுப்பை எனக்கு வழங்கிய விழாக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்! மேடை நிகழ்வுகளைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிய பதிவர்களுக்கும் நன்றி! முழுநிகழ்வுகளையும் பதிவில் பார்த்துவிட்டுதான் இரவு தூங்கினேன்.
மிக மகிழ்ந்தும் மிக நீண்டும் வாழ்கிறேன்....உங்கள் அனைவராலும்!

100% திருப்தி...
ReplyDeleteநன்றிகள் பல...
மகிழ்ச்சியும் நன்றியும்!
Deleteபாராட்டுக்கள் மா மிகச்சிறப்பான பணிக்கு..
ReplyDeleteமகிழ்கிறேன் சகோ....
Deleteநடந்த வரலாற்றைப் பதிவு செய்தவர் மட்டுமல்ல,
ReplyDeleteவரலாற்றை நடத்தியவர்களும் நீங்கள்தான் சகோதரி.
தங்கள் ஈடுபாட்டின், திட்டமிட்ட உழைப்பின், உணவின் சுவையில் அனைவரும் இதனை உணர்ந்தார்கள்.. விழா வெற்றியின் ஒவ்வொரு துளியிலும் நீங்கள் நிற்கிறீர்கள். வேறென்ன சொல்ல..?
நீங்கள் எனக்களித்த அற்புதமான பரிசு அண்ணா ...வலைப்பதிவர் தினம்! இந்த மகிழ்ச்சி அட்சயப் பாத்திரம்! அண்ணா..உங்கள் நேசமான புன்னகையில் நடந்ததுதான் இவ்வளவும் என்பதைத்தவிர நான் வேறென்ன சொல்ல...?
Deleteஅருமையான உபசரிப்பு. முதல் நாள் இரவு கிச்சடி தேங்காய் சட்னி, சப்பாத்தி குருமா பாதாம் பால். நிகழ்வு நாளன்று காலை வெண் பொங்கல் சட்னி சாம்பார், காபி, மதியம் முக்கனியுடன் ஐஸ்க்ரீம் பீடா என முழு விருந்து. சாயங்காலத்துக்கு குழிப்பணியாரம் தயாராகிக்கொண்டிருந்தது. முக்கிய வேலை காரணமாக அதை உட்கொள்ள புதுகையை விட்டு மனமில்லாமல் வந்தேன். விருந்தோம்பலில் புதுகைக்காரகளை மிஞ்ச முடியாது என்றும் சொல்லலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஉண்மையான மகிழ்ச்சி பகிர்வதில் இருக்கிறது!
Deleteஉங்கள் மகிழ்வான பகிர்வுக்கு நன்றிகள்!
வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துகள் சகோ ஆனால் நான்தான் சாப்பிடவில்லை.
ReplyDeleteநன்றி சகோ! நீங்கள் சாப்பிட வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் உண்டு. என்னசெய்ய நமக்கெல்லாம் மனதில் ஏற்படும் திருப்திதானே திருப்பதி!
Deleteசகோதரிக்கு நன்றி. நீங்கள் தந்த உபசரிப்பினையும், மதிய விருந்தினைப் பற்றியும் பாராட்டி ஒர் பதிவு எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
ReplyDeleteசகோதரருக்கு நன்றியும் வணக்கமும்! தங்கள் பதிவையும் படங்களையும் பார்த்துப்பார்த்து மகிழ்கிறேன்.கற்றுக்கொள்கிறேன் உங்களிடமிருந்து மனித நாகரீகங்களை! வாழ்த்துகள் !
Deleteமெனு பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதே.... அதை சாப்பிட்டு மகிழ்ந்த அனைவருடைய மகிழ்வும் உணர முடிகிறது.
ReplyDeleteசிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த உங்களுக்கும் விழாக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
உங்கள் பக்கத்திற்கு எனது முதல் வருகை. விருந்துடன் தொடங்கி இருக்கிறது!
நன்றியும் வணக்கமும்! “விருந்தினர் போற்றுதும், விருந்தினர் போற்றுதும்”
Deleteஅன்பின் இனிய சகோதரி (மகளே!) வணக்கம்!
ReplyDeleteஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது உண்மை அல்லவா! வயதின் காரணமாக வழக்கமாக நான் உண்ணும் அளவைவிட அதிகம் உண்டேன் என்றால் உணவின் சுவைக்கும், தங்களின் தயாரிப்பு முறைக்கும், அனைவரையும் நாடி
கேட்டுக் கேட்டு உபசரித்த பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி என்றால் மிகையல்ல! உடன் உழைத்த அனைவருமே பாராட்டத் தக்கவர்! நீவீர் பல்லாண்டு வளமுடன் வாழ்க!
அப்பாவுக்கு வணக்கம்! பல தரிசனங்களை நீங்கள் பரிமாறுகிறீர்கள்! மகிழ்வோடு வணங்கி ஆசியைப் பெற்றுக்கொள்கிறேன் நன்றியோடும்!
Deleteபிரமாதம் ஜெயாம்மா..கலக்கிட்டீங்க. மெனுவைப் பார்த்தாலே பசிக்குது.
ReplyDeleteவாழ்த்துகள் ஜெயாம்மா
நன்றி கிரேஸ்மா
Deleteஉண்ணும் போது நீங்கள்தான் ஜயலக்ஷ்மி உணவு இன் சார்ஜ் என்று தெரியாது. நீங்களும் உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை. என்னை அடையாளம் தெரிய உண்ணும் போது நேரம் எடுத்துக் கொள்வேன் என்றதற்கு நிதானமாய்ச் சாப்பிடுங்கள் அவசரமில்லை என்றீர்கள். ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இலை எடுக்க ஆட்கள் அருகில் வந்தனர். இருந்தால் என்ன. எனக்குப் புரிந்தது அவர்கள் அவசரம் எல்லோரும் புகழும்போது என் பங்குக்கு நான் ஒரு குறை சொன்னேன் அவ்வளவுதான் மற்றபடி முக்கனி கொடுத்தது டாப். வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் அய்யா! அந்த நேரம் அதை கவனிக்க தவறிவிட்டேன். மன்னிக்கவும்! வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா!
Deleteஇன்முகத்தோடு உணவு பரிமாறியதை மறக்க முடியாது. உணவின் சுவையும் அபாரம். என்றும் நினைவில் நிற்கும் விருந்தளித்தற்கு நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சியும் நன்றியும்!
Delete"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...
ReplyDeleteஇணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←
நன்றி...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
நன்றி
Deleteசமையல் கலைஞர்களுக்கு நன்றி சொன்னீங்க சரி, சாப்பிட்ட எங்களுக்கு எதுக்கு நன்றி. சோறு போட்ட உங்களுக்கு நாங்கலல்லவா நன்றியுரைக்கனும்.
ReplyDeleteசாப்பிட்டு கைகழுவியபின், முக்கனிகள் (மா, பலா, வாழை மிகச்சிறிய அளவோடு) சுவீட் பீடா , ஐஸ்கிரீம் ... மிஸ் பண்ணிட்டனே. ஒரு டைம் மிஷின் மட்டும் இருந்தா இன்னொருமுறை சாப்பிடுறதுக்காகவே வருவேன்.
வணக்கம் !
ReplyDeleteஉண்டவர்கள் சொன்னார்கள்
உயர்விருந்தென்று
மிக்க மகிழ்ச்சி ....!
சேவைகள் தொடரட்டும்
செந்தமிழ் வளரட்டும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !