நிற்க, அதற்குத் தக!
Pages
Home
Monday, April 27, 2015
புதிய புன்னகையை
உருவாக்கிக்கொள்ளலாம்
இந்த பழைய உதட்டில்!
Sunday, April 26, 2015
நச்சு-----5
நினைக்காதது நடந்தால்
நடந்ததையே....
நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது!
நச்சு----4
வாழத் தெரிந்தவர்களையும்
தண்டித்து விடுகிறது....
வாழ்க்கை...சிலநேரங்களில்..
வாழத் தெரியாதவர்களோடு சேர்த்து!
நச்சு---3
எளிமை....ஆடம்பரத்திற்கான எதிர்ச்சொல் அல்ல!
ஆணவத்திற்கான எதிர்ச்சொல் என்பதுதான் உண்மை!
நச்சு----2
என்னைத் தெரியவே தெரியாதென்று
சாதித்துக்கொண்டிருக்கிறாய்....
என் எல்லா அடையாள அட்டைகளையும்
காட்டிய பிறகும்?
நச்சு---1
படிக்கட்டுகளில்
வழிந்தோடுகிறது
மழைநீர்........
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறதா?
என் பிரியத்தின்
ஒரு தனித்த மழைத்துளி!
உணர்வே மேலோங்குகிறது
அறிவைக் காட்டிலும்
பழக்கப்பட்ட ஒன்றிலில்லை
பழகிவிட்ட உன்னிடம்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)