Pages

Saturday, July 19, 2014

அன்பு


காரல்மார்க்சை அவருடைய அறிவுக்காகக் காதலித்து மணந்தாள் ஜென்னி,வறுமை அவர்களை வாட்டி எடுத்தது,ஆனாலும் உள்ளம் தளராமல் அன்போடு இறுதிவரை வாழ்ந்தார்கள்,

வயதான காலத்தில் காரல் ஜென்னியைப் பார்த்து,’என் அன்பிற்கினிய ஜென்னி,வயதுவேண்டுமானால் உன் பிறைபோன்றிருந்த நெற்றியை உழுத நிலம்போல மாற்றியிருக்கலாம்,காலம்வேண்டுமானால் ஆப்பிள் போன்றிருந்த உன் கன்னத்தை உலர்ந்த திராட்சைபோல் மாற்றியிருக்கலாம்,அன்னநடை மாறியிருக்கலாம்,சின்ன இடை அழகை இழந்திருக்கலாம்,ஆனால் என் அருமை ஜென்னி உன்னை முதன்முதல் பார்த்தபோது எப்படி இருந்தாயோ அப்படித்தான் இன்றும் அழகாக இருக்கிறாய்,’என்று கூறினார் என்று வரலாறு கூறுகிறது
காரல்மார்க்சுக்கு ஜென்னி இறுதிவரை அழகாகவே தோன்றியதற்குக் காரணம் அன்பு,,,,,,
உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு,
உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்புதான் அன்பு,,,,




No comments:

Post a Comment