Pages

Wednesday, February 4, 2015

யாவும் சமீபித்திருக்கிறது; நூல் அனுபவம்


நேற்று தோழர் கடங்கநேரியான் அவர்கள் அவருடைய யாவும் சமீபித்திருக்கிறது

கவிதைத் தொகுப்பை அஞ்சலில் அன்போடும், வாழ்த்துக்களோடும்

அனுப்பியிருந்தார்கள். மிக்க நன்றி தோழர்.

நமக்குத்தான் புத்தகம் கிடச்சுட்டா போதுமே உடனே படித்துவிட்டேன். அடடா...மனிதர்

உணர்ந்துகொள்ள இது மனிதக்கவிதை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!

மேகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருவம் தெரியும்ல,

அப்புடித்தான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல் கொடுக்கும். சூப்பர்

மரபணு மாற்றம்

விற்ற விதை நெல்
திரும்பக் கிடைத்தது
வாய்க்கரிசியாக....

உயிரினங்களே இல்லாமப் போய்விடுமே என்கிற பல்நோக்கு சிந்தனை .....நிச்சயமா வேணும்  தோழர்.

கவலை

மரப்பாச்சி செய்வதற்காகவே
மரங்களை வெட்டுவதாக
பதிலளிப்பவனின்
குழந்தைகளையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருக்கிறாள்
கொல்லிப்பாவை

உன் புள்ள சிரிக்க என் புள்ளையக் கொல்றதா....தாய்மையின் கண்ணீர்க் கதையும் தந்திருக்கீங்க!  வாழ்த்துகள்  தோழர்.

கண்டடைதல்

சுயம் மறு
அகம் அழி
யாசி
ஒருபொழுதேனும்
கடவுளை
கண்டடையலாம்....

இவ்வளவு செஞ்சு அவரக் கண்டடையனுமா? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....சொல்றாங்க.    ஏழை எங்க சிரிக்கறது இவர நாம் பாக்குறது......எனக்கு சிரிப்பு வந்துச்சு(ஏழை இல்ல நான்)
எல்லாக் கவிதைகளும் மாடன் ஆர்ட் மாதிரி அழகு!

ஒரே ஒரு நெருடல் மட்டும் என் மனதில் பட்டதைச் சொல்றேன் தோழர். எழுத்தாளர்கள் என்கிற தலைப்பில் எழுத்தாளர்களை நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க அது உங்க உரிமை. அதே சமயம் புண்படுத்த வேண்டாம்.

மைக்கிற்காக ஆளாய்ப் பறந்த மனுஷ்யபுத்திரன்...   எழுதியிருக்கீங்க
உண்மைதான் ஆனாலும் சக்கர நாற்காலியில் இருப்பவர் தன்னை நிலைநிறுத்த, முன்னிலைப்படுத்த முயற்சிப்பாங்கதான்  தோழர்.. தொடர்ந்து 24 மணி நேரமும் பேச தயாரா இருக்காரே?  அதுமட்டுமில்லாம  இல்லாதத இருக்கறதா சொல்லி பேசணும்னு சொன்னா, எனக்குத் தெரிஞ்சு கண்ணதாசன், கலைஞர் இவர்களுக்குப்பிறகு மனுஷ்யபுத்திரனாலதான் முடியும்னு   நினைக்கிறேன் .....  ..திறமைதானே!

எழுத்தாளர்களோட வாழ்க்கை வழியே அவுங்க எழுத்துகள மதிப்பிடுறதும், எழுத்துகள்

வழியே எழுத்தாளனை மதிப்பிடுறதும் மாறி மாறி நடக்குறதுதானே தோழர்.

கடைசியா ஜி.நாகராஜனை நினைத்து கண்ணயர்ந்தேன்...னு சொன்னது மகிழ்ச்சியின் உச்சம்.

அவரோட ஆண்மை கதையப் படிச்சு சப்த நாடியும் ஒடுங்கித்தான்

 போனேன்.உடல்களைத்  தாண்டி  உருவாகும்  உறவுகளோட  வித்தியாசமான

 முடிச்சுகள அவிழ்ப்பதில் அவருக்கு நிகர் அவரே!

யாவும் சமீபித்திருந்தது தோழர் வாழ்த்துக்களும் நன்றிகளும்  தோழர்.

10 comments:

 1. நல்லதொரு அலசல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அருமையான நூல் அறிமுகம் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 3. நீங்கள் படிக்கும் நூல்களை அறிமுகம் செய்தாலே தினம் ஒரு பதிவு போடலாமே சகோதரீ? (ஆமா என் புத்தகம் பற்றி எதுவும் சொல்ல மாட்டீங்களா? இந்த வாரம் (பிப்.08) கல்கி இதழில்கூட வந்தாச்சு.. சரி. ஏதாவது எழுதிக்கிட்டே இருங்க.நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இப்பதான் அந்த புத்தி வந்துச்சு அண்ணா. இனி பாருங்க அண்ணாவையும் கலாய்ப்போம்ல.....நன்றி அண்ணா

   Delete
 4. அம்மா
  முதலில் தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு ரீசன் தெரியும், so மன்னிபீங்க. உங்க ஸ்டைல அசத்தலா ஒரு அனுபவப்பகிர்வு!! வாழைபழத்தில் ஊசி ஏத்துறது மாதிரி, அங்கங்க கொஞ்சம் சுருக் பன்ச்!! சூப்பர் ம்மா:)

  ReplyDelete
  Replies
  1. என் மனசுலப் பட்டதச் சொல்றேன், அவ்வளவுதாண்டா

   Delete
  2. என் மனசுலப் பட்டதச் சொல்றேன், அவ்வளவுதாண்டா

   Delete