நிற்க, அதற்குத் தக!
Pages
Home
Sunday, July 5, 2015
சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திப்பது என்றிருக்காமல், சிலரைச் சந்திப்பதற்காகவே சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள்!
சிலாகிக்க சில விஷயங்களாவது கிடைத்துவிடும்!
குப்பைகளை மட்டுமில்லாது
குறைகளையும் போடத்தான்
குப்பைத்தொட்டிகள்!
Sunday, May 31, 2015
இல்லாத போதும்
இருந்து கொண்டேயிருக்கிறது
இழந்த காதல்!
இன்னுமொரு சாத்தியத்திற்கா?
ஓரிடத்தில் பிடுங்கினால்
வேறிடத்தில் முளைக்கிறாய்
ரகசிய விதியா? விதையா?
ஒரு புதிய இடத்தில்
பழகுவதைவிட வேதனையானது
ஒரு பழைய இடத்தில்
புதிய இடம்போல பழகுவது!
தவறுகள் புரியும் போது
ஏற்படுகிற தடுமாற்றம்தான்
உண்மையான மரணம்!
காணாமல் போன நீ
என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறாய்!
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே
ஒரு விசித்திரமான இடத்தில்
வாழ்ந்துகொண்டே இருக்கிறாய்
காணாமல் போன நீ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)