Pages

Saturday, July 19, 2014

அன்பு


காரல்மார்க்சை அவருடைய அறிவுக்காகக் காதலித்து மணந்தாள் ஜென்னி,வறுமை அவர்களை வாட்டி எடுத்தது,ஆனாலும் உள்ளம் தளராமல் அன்போடு இறுதிவரை வாழ்ந்தார்கள்,

Tuesday, January 21, 2014

தூங்காமல் இருக்கச்சொன்னவர் ...தூங்கிப்போன நாள்....

இது வரை நாம் எங்கிருந்தோம், 
எப்படி இருந்தோம் 
என்பதைப் பொறுத்ததல்ல 
லட்சியம். 

நீங்கள் 
எப்படி வேண்டுமானாலும் 
இருந்திருக்கலாம்

 நாளை எதிர்காலத்தில் 
எங்கே போக விரும்புகிறோம் 
என்பதைப் பொறுத்ததே, 
லட்சியம்.   

லட்சியம்
 தீர்மானிக்கப்பட்டு விட்டால் 
நாளடைவில் 
பாதை அமையும். 

பாதையில் 
நடக்கத்துவங்கும் போது 
லட்சியம்
 தீபமாய், 
ஒளியாய் வழிகாட்டும்

- Dr.M.S.உதயமூர்த்தி
(மனித மனங்களுக்கான சிறப்பு வைத்தியர்)


”படி படி படி ”சொன்னது யார்? பாரதிதாசனுக்கு முன்னால்....

 உலகப்புரட்சியின் தலைவன் லெனின் நினைவு நாளில்....

உங்களுடன் சில வரிகள்

லெனினின் வாக்குமூலமாகவே...
(லெனின் சோவியத்தின் அதிபரான பிறகு முதன்முறையாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாணவர்களுக்குத் தேவையான முக்கிய மூன்று கடமைகள் என்ன என்றதும் வினாவினுக்கு விடை என்னாவாய் இருக்கும் என்ற ஆவலில் இருந்த மாணவர்களிடம் , மூன்றுக்குமே சொன்ன விடை இதுவே.....)



படி

படி

படி.




Monday, January 20, 2014




என்னுடைய சாதனைகளை
முறியடிப்பதே
என் இலட்சியம்..

-உசேன் போல்ட்

Saturday, January 18, 2014

நிற்க, அதற்குத் தக.. !

இன்று  புதிதாய் பிறந்தேன்....

உருவத்தால் அல்ல..!

உள்ளத்தால்..


வலைப்பூ என்னும் கலைப்பூவின்

 மகரந்த எல்லைக்குள் 

எட்டிப்பார்த்ததால்.

தொடரும் பதிவுகளில்

ஏதேனும் செய்திகள் இருக்கும்...

 நிற்க அதற்கு தக.. !